Sunday, January 3, 2010

THIRUKURAL ( திருக்குறள் )

பெயர்க்காரணம்
தமிழ் மொழியில் உள்ள மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் ‘குறள் வெண்பா’ என்பது பெயர். இதற்குக் குறுகிய வடிவினை உடைய வெண்பா என்று பொருள். இத்தகைய பாடல்களால் இயற்றப்பட்டதால் ‘குறள்’ என்று அழைக்கப்படுகிறது.

‘திரு’ என்பதற்கு உயர்வு, அழகு, சிறப்பு, செல்வம் எனப் பல பொருள் உண்டு. தமிழில் உள்ள சிறந்த படைப்புகளையும், சிறப்புடையோர்களையும், ‘திரு’ எனும் அடைமொழி சேர்த்து அழைப்பது மரபு. எனவே, சிறப்புக்கருதி, குறுகிய வெண்பாக்களால் ஆகிய குறள் ‘திருக்குறள்’ என அழைக்கப்படுகிறது.

இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உள் பிரிவுகளை உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று அழைக்கப்படுகின்றன.

அறத்துப்பால்
அறத்தின் பெருமையையும், பயனையும் விளக்குவது அறத்துப்பால்.

பொருட்பால்
பொருளின் சிறப்பையும், அதைச் சேகரித்து, காத்து, வகுத்து வழங்கும் முறைகளையும் கூறுவது பொருட்பால். இதில், சமுதாயம் பற்றிய கருத்துகளும், அரசியல் நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

காமத்துப்பால்
காமத்துப்பாலில் காதலர்களின் அன்பின் வெளிப்பாடும், ஈடுபாடும், மனப்போக்கும், விழுமியங்களும் சுவையாக விளக்கப்படுகின்றன.

அதிகாரங்கள், பாடல்கள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும், இரண்டு அடிகளை (வரிகளை) மட்டுமே உடையதாக இருக்கிறது.

மூன்று வகை பால்களாகத் திருக்குறள் பகுக்கப்பட்டு இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.

அவ்வகையில் அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன.

பொருட்பால், அரசு இயல், அங்க இயல், ஒழிபு இயல் என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இன்பத்துப் பாலில், களவு இயல், என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.


அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப்பால்

இயல்

பாயிர இயல்

இல்லற இயல்

துறவற இயல்

அரசு இயல்

அங்க இயல்

ஒழிபு இயல்

களவு இயல்

கற்பு இயல்

அதிகாரங்கள்

4

20

14

25

32

13

7

18

133

குறள்

40

200

140

250

320

130

70

180

1330


No comments:

Post a Comment