‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக!’ என்று இறைவனாலேயே அருள் கட்டளை இடப்பட்டவர் மாணிக்கவாசகர். மதுரை அருகே, வைகையாற்றின் கரை யில் இருக்கும் திருவாதவூரில் சம்புபாதாசிரியர் & சிவஞானவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர் என்பது. இளமையிலேயே கல்வி& கேள்விகளில் தலை சிறந்து விளங்கியவர். தலங்கள் தோறும் யாத்திரை செய்து பாடல்களைப் பாடிப் பரவிய மாணிக்கவாசகர், திருவண்ணாமலைக்குச் சென்றார். அப்போது மார்கழி மாதம். விடியற் காலையில் கன்னிப் பெண்கள் ஒன்று கூடி, சிவபெருமானின் அருள் பண்புகளைப் பாடிச் சென்று, நீராடி, அம்பிகையை வழி படுவது வழக்கம். அப்படி, கன்னிப் பெண்கள் நீராடச் செல்வதைக் கண்டார் மாணிக்கவாசகர். அந்தப் பெண்களின் வாக்காகத் திருவெம் பாவையைப் பாடியருளினார்.
You can listen Thiruvempavai MP3 below location http://www.esnips.com/web/Thiruvempavai
No comments:
Post a Comment